Latestமலேசியா

புச்சோங்கில் நிலச்சரிவு 4 கார்கள் – 9 வீடுகள் பாதிப்பு

பூச்சோங் , டிச 17 – பூசாட் பண்டார் பூச்சோங்கில் ஜாலான் வவாசான் 3/9 ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு கார்கள் மற்றும் 9 வீடுகள் சேதம் அடைந்தன. கடும் மழையின்போது நேற்றிரவு மணி 7.10 அளவில் அந்த பகுதியை சுற்றியுள்ள மரங்கள் கீழே விழுந்ததாக 72 வயது அப்துல் ரஹிம் என்பவர் தெரிவித்தார்.

நான் வீட்டினுள் ஓர் அறையில் இருந்தேன். திடீரென கடுமையான மழை பெய்தபோது பல்வேறு மரங்கள் கீழே சாய்வதை கண்டேன். வெளியே வந்து பார்த்தபோது சாலை முழுமையாக மூடிக் கிடந்ததைத் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அப்துல் ரஹிம் கூறினார்.

ஜாலான் வாவாசான் 3/9 இல் ஒரு பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதால் அவர்கள் தற்போது பூச்சோங் பண்டார் புத்ரி, லாமான் புதேரியிலுள்ள பலநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா தொழில்மய திட்ட நிர்வாக பிரிவின் துணை இயக்குனர் அஸ்ஃபாரீசால் அப்துல் ராசிட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், சிவில் தற்காப்பு படையினர், ஆயேர் சிலாங்கூர் Air Selangor அதிகாரிகள் காணப்பட்டனர்.

நேற்றிவு மணி 10.30 அளவில் சுபாங் ஜெயா மேயர் முகமட் ஃபாவுசி முகமட் யாதிம் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!