Latestமலேசியா

180,000 மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்கு செல்லவில்லை

அலோர் கஜா, செப் 26 – 13முதல் 17 வயதுடைய 180,000 மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளுக்கு செல்லவில்லை என மலாயா பல்கலைக்கழகத்தின் STEM மையத்தின் இயக்குனர் டாக்டர் சஹிதாயான முக்தர் தெரிவித்தார். STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவவை இளம் தலைமுறையினரிடையே சிந்தனையை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குற்றச் செயல்கள் போன்ற ஆரோகியமற்ற நடவடிக்கையில் அவர்கள் சிக்கிக் கொள்வதையும் STEM பாடங்கள் தடுக்கிறது என அவர் கூறினார்.

பள்ளிக்குச் செல்லாதவர்கள் சில குற்றச்செயல்களில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். தீர்மானிக்கும் சிந்தனை திறன் இல்லாததால், அவர்கள் தவறுகளை மீண்டும் செய்கிறார்கள் என்று டுரிஏன் தூங்கல் லில் மலாக்கா மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மடணி சமூகத்தில் STEM கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் கருத்தரங்கில் உரையாற்றியபோது மாஸ் சஹிதாயான தெரிவித்தார். மாணவர்களில் பெரும்பாலோர் நான்காம் படிவத்தில் அறிவியல் துறையில் பயிலும்போது அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பாடங்களில் ஆர்வமின்றி இருக்கின்றனர். எனவே இளைய தலைமுறையினர் இந்த பாடங்களில் ஆர்வம் கொண்டிருப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் ஊக்குவிக்க வேண்டும் என மாஸ் சஹிதாயான கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!