சியோல், டிசம்பர்-29 – தென் கொரியாவில் இன்று காலை தரையிறங்கும் போது விமானம் வெடித்துச் சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை 62-டாக உயர்ந்துள்ளது.
அவர்களில் 24 பேர் ஆண்கள், 37 பேர் பெண்கள்; இதுவரை இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாட்டு தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
181 பேருடன் தாய்லாந்தின் பேங்கோக்கிலிருந்து புறப்பட்டு வந்த அந்த Jeju Air விமானம், தென்மேற்கில் உள்ள மூவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது.
மொத்தப் பேரில் 175 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் அடங்குவர்.
தரையிறங்கும் முன்பாக பறவைகளுடன் மோதியதால், விமானத்தின் கியரில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அது உண்மை தானா என்பதை விசாரித்து வருவதாக Jeju Air பேச்சாளர் சொன்னார்.
விமானம் வெடித்துச் சிதறும் பதைபதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.