
ஜோர்ஜ்டவுன், மே 24 – கை தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதால் அதனால் ஆத்திரம் அடைந்த மாணவி ஒருவர்தான் Guyana இடைநிலைப் பள்ளியில் தங்கும் விடுதிக்கு தீ வைத்ததாக விசாரணையின் மூலம் தெரிவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 19 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமான அந்த தீச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய மாணவிக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசாரணையின்போது
அம்மாணவி பள்ளியின் தங்கும் விடுதிக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டார்.
இறந்தவர்கள் அனைவரும் 11 முதல் 12 மற்றும் 16 முதல் 17 வயதான பெண் மாணவிகளாகும்.