கோத்தா பாரு, பிப் 2 – சாலை தடுப்பு சோதனையின்போது 19 ஆண்டுகளுக்கு முன் தப்பிச் சென்ற நபர் இறுதியில் பிடிபட்டான். அந்த நபரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்து. 38 வயதுடைய ரயில் ஓட்டுனரான அந்த சந்தேகப் பேர்வழி 2003ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்ததாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ ஷாபின் மாமாட் தெரிவித்தார்.
அந்த நபரிடமிருந்து இரண்டு சமுராய் கத்திகளுடன் போதைப் பொருள் என நம்பப்படும் 2 லிட்டர் திரவமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நபர் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள அவனது வீட்டிலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் 54,000 ரிங்கிட் ரொக்கத் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஷாபின் மாமாட் தெரிவித்தார்.