
கோலாலம்பூர், மார்ச் 14 – 1MDB யின் எஞ்சிய கடன் தொகையில் அரசாங்கம் இதுவரை 43.8 பில்லியன் மலேசிய ரிங்கிட்டை செலுத்தியிருக்கிறது. 5 பில்லியின் ரிங்கிட்டிற்கான மூல கடன் சம்பந்தப்பட்ட மற்றும் அதற்கான 4.7 பில்லியன் ரிங்கிட் வட்டி சம்பந்தப்பட்ட 9.7 பில்லியன் ரிங்கிட் கடன் இன்னும் செலுத்தப்படவில்லை. நிதித்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ Ahmad Maslan இதனைத் தெரிவித்தார். பங்கு தாரர்கள் மூலமாக 24.5 பில்லியன் ரிங்கிட்டும் Trust கணக்கு மூலமாக 19.3 பில்லியன் ரிங்கிட்டும் செலுத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சின் விநியோக மசோதா மீதான விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது Ahmad Maslan இந்த விவரங்களை வெளியிட்டார்.