
கோலாலம்பூர், மார்ச் 7 – 1 MDB சொத்துக்களில் 70 விழுக்காடு சொத்துக்கள் மற்றும் நிதி திரும்ப மீட்கப்பட்டு விட்டது. அவற்றின் மதிப்பு 28.93 பில்லியன் ரிங்கிட்டிற்கு இணையான மதிப்பை கொண்டதாகும். வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் உள்ள எஞ்சிய 30 விழுக்காடு சொத்துக்கள் மற்றும் நிதியை மீட்பதற்கான செயல் திட்டங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஈடுபட்டு வருவதாக அதன் தலைமை ஆணையர் Azam Baki தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள 1 எம்.டி.பி மற்றும் அதன் நிதிகளை திரும்ப மீட்கும் முயற்சியை நாங்கள் நிறுத்தப்போவதில்லையென இன்று M.A.C.C தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Azam Baki தெரிவித்தார்.