
நியு யோர்க் , மார்ச் 10 – 1MDB நிறுவன நிதியிலிருந்து பல பில்லியன் டாலர் பணத்தை திருட உதவிய Goldman Sachs வங்கியின் முன்னாள் ஊழியர் Roger Ng-கிற்கு, அமெரிக்க நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது.
மலேசியாவுக்கான வங்கி முதலீட்டு பிரிவின் முன்னாள் தலைவரான Roger Ng, தனது முன்னாள் முதலாளி Tim Leissner, 1MDB நிதியிலிருந்து பணத்தை கையாட உதவியதோடு, வர்த்தக வாய்ப்புகளைப் பெற அரசாங்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது.
1MDB நிதியிலிருந்து 450 கோடி டாலர் பணம் கையாடப்பட்ட சம்பவம், Wall Street வரலாற்றிலே மிகப் பெரிய மோசடியாக, அமெரிக்க வழிக்கறிஞர்கள் வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.