Latestமலேசியா

1MDB மோசடி; அஸ்ட்ரோ முன்னாள் CEO விசாரணை

கோலாலம்பூர், பிப் 25 – அமெரிக்காவில் 1MDB தொடர்பான நீதிமன்ற வழக்கில் , Goldman Sachs நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி Tim Leissner வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து, மலேசிய Astro நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி Rohana Rozhan-னை , அரச மலேசிய ஊழல் ஆணையம் விசாரித்துள்ளது.

1MDB மோசடியில் தனது ஈடுபாடு குறித்து வாய் திறக்காமல் இருக்க, Rohana – விற்கு லண்டனில் 1 கோடி அமெரிக்க டாலர் பெருமானமுள்ள வீட்டை வாங்கி தந்ததாக Tim Leissner கூறியிருந்தார். அத்துடன் , Rohana -வுடன் தான் 2003 –இல் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை உறவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து லண்டனில் Rohana- விற்கு வாங்கி கொடுக்கப்பட்ட வீட்டிற்கு பணம் எங்கிருந்து வந்தது என விசாரணை நடத்தும்படி நாட்டில் சில தரப்புகள் வலியுறுத்தி இருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!