Latestமலேசியா

1MDB-யில் ஏற்பட்ட தவறுகளுக்கு மக்களிடம் நஜீப் மன்னிப்புக் கோரியதை வரவேற்றார் பிரதமர் அன்வார்

புத்ராஜெயா, அக்டோபர்-25, 1MDB நிறுவனத்தில் நடந்த அனைத்து தவறுகளுக்கும் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பதை, பிரதமர் வரவேற்றுள்ளார்.

நஜீப்பின் செயல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றென, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுருக்கமாகத் தெரிவித்தார்.

உலகம் கண்ட மாபெரும் ஊழல்களில் ஒன்றாக கருதப்படும் 1MDB தொடர்பில், முன்னாள் பிரதமருமான நஜீப் நேற்று நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நஜீப்பின் மன்னிப்பு அறிக்கையை, அவரின் மகன் டத்தோ மொஹமட் நிசார் நஜீப் (Datuk Mohamad Nizar Najib) வாசித்தார்.

1MDB விஷயத்தில் தாம் தவறிழைக்கவில்லை என்றும், தலைமறைவாகியுள்ள கோடீஸ்வரர் ஜோ லோவ் (Jho Low) தான் எல்லாவற்றுக்கும் காரணமென்றும் நஜீப் அதில் கூறியிருந்தார்.

ஐந்தாண்டுகளாக நடைபெற்று வரும் 1MDB வழக்கில் நஜீப்பை எதிர்வாதம் புரிய அழைப்பதா அல்லது விடுவிப்பதா என்பதை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்னும் சில தினங்களில் முடிவு செய்யவிருக்கும் நிலையில், நஜீப் அந்த மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!