
காஜாங், மார்ச் 21 – இரு ஆடவர்கள் நபி முகம்மதுவை அவமதித்திருக்கும் காணொளி தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சு கடுமையாக கருதுவதாகக் கூறிய அமைச்சர், தற்போது அதன் தொடர்பில் போலீஸ் விசாரணையை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அண்மையில் , இரு ஆடவர்கள் நபி முகம்மதுவை அவமதிக்கும் 52 வினாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பெரிதும் பகிரப்பட்டிருந்தது.