Latestமலேசியா

போக்குவரத்து நெரிசல் கிள்ளான் பள்ளத்தாக்கு வாகனமோட்டிகள் ஒரு ஆண்டிற்கு எண்ணெய்க்காக ரி.ம 6.5 பில்லியன் செலவிடுகின்றனர்

கோலாலம்பூர், பிப் 21 – போக்குவரத்து நெரிசலினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள வாகன ஓட்டுனர்கள் ஒரு ஆண்டிற்கு பெட்ரோல் எண்ணெய்க்காக 6. 5 பில்லியன் ரிங்கிட்டை செலவிடுகின்றனர். பரபரப்பான நேரங்களில் காலை 6 மணி முதல் 9 மணிவரை கோலாலம்பூர் நகருக்குள் தினசரி 22 லட்சம் வாகனங்கள் நுழைகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டுனர்கள் நீண்டநேரம் வாகனத்தில் இருக்க வேண்டியை சூழ்நிலைக்கு உள்ளாகின்றனர் என சாலை பாதுகாப்பு நிபுணரான புத்ரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Law Teik Hua தெரிவித்திருக்கிறார். தினசரி கோலாலம்பூர் நகருக்கு சராசரி 60 லட்சம் வாகனங்கள் நுழைவதாகவும் பரபரப்பான நேரத்தில் அந்த எண்ணிக்கை 22 லட்சமாக இருப்பதை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் புள்ளி விவரங்கள் காட்டுவதையும் Law Teik Hua சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!