Latestமலேசியா

2 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய இந்திய வர்த்தக மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது

கோலாலம்பூர், செப் 23 – இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய- இந்திய வர்த்தக மன்றத்தின் 14-ஆவது ஆண்டுக் கூட்டம் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது. மலேசிய இந்தியர்கள் வெளிநாடுகளில் வர்த்தகம் தொடர்பான நவடிக்கைளை விரிவுபடுத்துவதற்கு பல கட்டுப்பாடுகளை அகற்றுவது தொடர்பில் அனைத்துவலக வாணிக தொழில்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் Tan Sri Kuna Sithampalam தெரிவித்தார். மலேசிய விமான நிறுவனங்கள் இந்தியாவில் கூடுதலாக தரையிறங்கும் உரிமைகளை பெறுவதற்கும் மலேசிய இந்திய வர்த்தக மன்றம் இந்திய வர்த்தக அமைச்சருடன் பேச்சு நடத்தும் என்றும் அவர் அவர் தெரிவித்தார்.

இதனிடையே மலேசிய-இந்திய வர்த்தக மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இந்திய தூதர் B. N Reddy-யும் கலந்துகொண்டார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய-மலேசிய வர்த்தக ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதோடு விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். மலேசிய மற்றும் இந்திய வர்த்தகர்கள் இருநாடுகளிலும் இருந்துவரும் வர்த்தக வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என B.N Reddy கேட்டுக்கொண்டார்.

உலகளாவிய நிலையில் எண்ணெய் விலையேற்றம், உணவுப் பொருள் பற்றாக்குறை மற்றும் உக்ரைய்னுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண் படையெடுப்பு போன்ற விவகாரங்களினால் உலகாளவிய நிலையில் வர்த்தகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும் மலேசியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான சிறந்த நட்புறவினால் இந்திய – மலேசிய வர்த்தக ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என B.N Reddy நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!