Latestமலேசியா

2-ஆம் கட்ட ரஹ்மா உதவித் தொகை ஹரிராயா-வுக்கு முன்னதாகவே வழங்கப்படும் ; அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 14 – இரண்டாம் கட்ட Rahmah உதவித் தொகையை, ராயா பெருநாளுக்கு இரு வாரங்களுக்கு முன்பே பகிர்ந்தளிக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , நிதியமைச்சை உத்தரவிட்டிருக்கிறார்.

பெருநாளை வரவேற்கும் மக்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக அந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக, பிரதமர் மக்களவையில் தெரிவித்தார்.

முன்னதாக, 16 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய முதல் கட்ட உதவித் தொகை, கடந்த ஜனவரி மாதமே , மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

இவ்வேளையில், இம்மாதம் மார்ச் 13-ஆம் தேதி வரை, Rahmah உதவித் தொகையைப் பெற செய்யப்பட்ட 3 லட்சத்து 20,103 புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!