
கோலாலம்பூர், ஜன 25 – மூடா ஏற்பாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்ததாக அம்னோ இளைஞர் பிரிவை தொடர்புபடுத்தி டுவிட்டரில் பதிவேற்றம் செய்தது தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக பக்காத்தான் ஹராப்பானின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களை போலீஸ் அழைத்துள்ளது. Bentong நாடாளுமன்ற உறுப்பினர் Young Syefura Othman உதவியாளர் Noor Suhana Ishak விசாரணைக்காக செந்தூல் போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பபட்டுள்ளார். பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியின் பத்திரிகை செயலாளர் Farhan Iqbal புத்ரா ஜெயா போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.