Latestமலேசியா

2 கவச வாகனங்களை ஏற்றிச் சென்ற டிரக் விபத்திற்கு அலட்சியமே காரணம் – விசாரணையில் தெரியவந்தது

கோலாலம்பூர், நவ 29 – நவம்பர் 8 ம் தேதி கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில் கவச வாகன டிரான்ஸ்போர்ட்டர் சம்பந்தப்பட்ட விபத்தில் அலட்சியத்தின் கூறுகளை ராணுவம் கண்டறிந்துள்ளது.

அந்த போக்குவரத்து வாகனத்தின் வேக வரம்பு சம்பந்தப்பட்ட அலட்சியத்தின் கூறுகளும் இந்த விபத்துக்கு காரணம் என விசாரணை வாரியம் கண்டறிந்துள்ளதாக ராணுவப் படை தலைவர் ஜெனரல் Tan Sri Muhammad Hafizuddeain Jantan  தெரிவித்தார்.

விபத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வானிலை நிலைகளை அடையாளம் காட்டுகிறது. முதன்மையாக வழுக்கும் சாலை மேற்பரப்புகள் காரணமாகும். இரண்டு கவச வாகனங்களை ஏற்றிச் சென்ற டிரக்கின் வேகம் மற்றும் எடையும் விபத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

நிர்ணயிக்கப்ட்ட சீரான நடைமுறையில் வரம்பை மீறி டிரக்கின் வேகம் இருந்ததில் அலட்சியத்தின் கூறுகள் இருந்தன என Puncak Alam மில் மூழ்கிய நான்கு இளைஞர்களை காப்பாற்றிய ராணுவ வீரரை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசியபொது முகமட் ஹபிசுடின் இதனை தெரிவித்தார்.

வாகன ஓட்டுனர் அல்லது கவச வாகன தொகுதி மேற்பார்வையாளரை உள்ளடக்கிய எந்தவொரு அலட்சியச் செயலிலும் ராணுவம் சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது ராணுவ விதிமுறைகளுக்கு ஏற்ப ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!