
பத்து காஜா, மே 19 – தமக்கு சொந்தமான இரண்டு காளை மாடுகள் திருடப்பட்டதாக அதன் உரிமையாளரான நித்தியானந்தன் ரெங்கநாதன் போலீசில் புகார் செய்துள்ளார். பத்து காஜா கம்போங் பாரு கிந்தா வெல்லியைச் சேர்ந்த 36 வயதுடைய நித்தியானந்தன் பாரிட் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரை செய்துள்ளார். நேற்று பிற்பகல் மணி 2.30அளவில் கம்போங் பாரு கிந்தா வெல்லியில் தமது மாட்டுப் பட்டியில் இருந்தபோது தமது நண்பர் முருகேசனிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் தமக்கு சொந்தமான இரண்டு மாடுகளை மூன்று ஆடவர்கள் பத்து காஜா, மூன்றாவது மைலில் உள்ள செம்பனை தோட்டத்தில் ஒரு லோரியில் ஏற்றிச் சென்ற தகவலை பெற்றதோடு அந்த லோரியை பின்தொடர்ந்து சென்ற முருகேசன் அந்த லோரியின் பதிவு எண்ணை தெரிந்துகொண்டதோடு அதிலிருந்த மூன்று ஆடவர்கள் தமக்கு தெரிந்தவர்கள் என்றும் போலீஸ் புகாரில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமது மாடுகள் திருடப்பட்டது தொர்பான அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் நித்தியானந்தன் புகார் செய்தார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் இன்று நால்வர் பிடிபட்ட தகவலை
பத்து காஜா போலீஸ் அதிகாரி ஒருவர் தமக்கு தெரிவித்தாக நித்தியானந்தன் வணக்கம் மலேசியாவிடம் உறுதிப்படுத்தினார். மாடுகள் திருடப்பட்டபோது இருந்த மூவருடன் நான்காவது நபரான லோரியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்தை போலீசார் தெரிவித்தாக அவர் கூறினார். தமது காளை மாடுகள் திருடுபோனது தொடர்பில் போலீசில் புகார் செய்த அடுத்த சில நிமிடங்களியேயே உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தமது மாடுகளையும் கண்டுபிடித்த பத்து காஜா போலீஸ் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தாம் நன்றி கூறுவதாகவும் நித்தியானந்தன் தெரிவித்தார்.