திருச்செந்தூர், செப்டம்பர் 25 – புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி செப்டம்பர் மாதம், பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கையை எண்ணும் பணி, இன்று நடைபெற்றது.
இதன்படி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கடந்த மாதம் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் 5 கோடியே 15 லட்சம் ரூபாய், அதாவது மலேசிய ரிங்கிட்டிற்கு 2 லட்சம் 54 ஆயிரத்திற்கு வருமானம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், 2 கிலோ 352 கிராம் தங்கம், 41 கிலோ 998 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.