ஜோகூர் பாரு, செப்டம்பர் -7 – ஜோகூர் மிருகக்காட்சி சாலையில் 2 மலாயா புலிகளுக்கு இரையாவதிலிருந்து, எங்கிருந்தோ வந்த பூனைக் குட்டி மயிரிழையில் தப்பியது.
புலிக் கூண்டின் சிறிய கால்வாயில் பூனைக் குட்டி பயத்தோடு அமர்ந்திருப்பதும், 2 மலாயா புலிகள் அதனை நெருங்கி வெறித்து பார்ப்பதும் டிக் டோக்கில் வைரலான வீடியோவில் தெரிகிறது.
வீடியோவைப் பார்க்கும் நமக்கே பதற்றம் தொற்றிக் கொள்ளும் நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் அந்த பரபரப்பான நிமிடங்கள் எப்படி எதிர்கொண்டிருப்பர்?
எனினும் சுதாகரித்துக் கொண்ட மிருகக்காட்சி சாலை பணியாளர் தண்ணீரை பாய்ச்சி அடித்து புலிகளைத் அங்கிருந்தி துரத்தி விட்டார்.
அப்போது அதிலொரு புலி சினத்தில் வேகமாக உறுமியதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு நிலவியது.
அந்த சமயத்தில் கையை உள்ளே விட்டு பூனைக்குட்டியை அவர் வெளியே இழுத்துப் போட, நிம்மதி பெருமூச்சில் வருகையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
வைரலான வீடியோ இதுவரை 18 லட்சம் பார்வைகளையும் 123,000 likes-க கையும் அள்ளியிருக்கிறது.
பூனைக் குட்டி புலிகளிடமிருந்து தப்பினாலும், அது முதலில் எப்படி புலி கூண்டுக்குள் போயிருக்கும் என்ற நெட்டிசன்களின் கேள்விக்குத் தான் விடையில்லை.