Latestமலேசியா

2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை; பினாங்கில் திடீர் வெள்ளம்

ஜோர்ஜ் டவுன், செப் 24 – இன்று காலையில் 2 மணி நேரத்திற்கும் பெய்த கடுமையான மழையைக் தொடர்ந்து பினாங்கில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. Sungai Ara , Bayan Lepas, Teluk Kumbar ஆகிய இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது. காலை 7 மணி முதல் மழை பெய்ததாக சுங்கை ஆராவைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளில் சிலர் தெரிவித்தனர். கால்வாயில்களில் தேங்கிய நீர் சரியான நீரோட்டமில்லாத காரணத்தினால் பிரதான சாலைகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. Bukit Jampul பகுதியில் 1 மீட்டர் உயரத்திற்கும் மேலாக வெள்ளம் ஏற்பட்டது. பினாங்கு தீவில் ஜெலுத்தோங் உட்பட இதர பல்வேறு பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!