Latestமலேசியா

2 லட்சம் ரிங்கிட் வருமான வரி பாக்கியா? அதுவொரு கட்டுக்கதை என்கிறார் துணையமைச்சர் சரஸ்வதி

ஒற்றுமைத் துறை அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, கிட்டத்தட்ட 2 லட்சம் ரிங்கிட்டுக்கு தாம் வருமான வரி பாக்கியை வைத்திருப்பதாகக் கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

2010 முதல் 2020 வரை பத்தாண்டுகளாக சரஸ்வதி வருமான வரி பாக்கி வைத்திருப்பதாகவும், இந்நிலையில் வெளிநாடு செல்ல உள்நாட்டு வருமான வரி வாரியம் (LHDN) அவருக்கு தற்காலிக அனுமதி வழங்கியிருப்பதாக பிரதிபலிக்கும் ஆவணங்களும் நேற்று பகிரப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

அதோடு, மருத்துவ சிகிச்சைக்காகவே அவருக்கு அந்த தற்காலிகப் பயண அனுமதி வழங்கப்படுவதாக விளக்கி தேசியப் போலீஸ் படைத் தலைவருக்கும், LHDN தலைமை இயக்குநருக்கும் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதமும் கசிந்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அது வேலையில்லாதவர்களின் கட்டுக்கதை; அச்செய்தி வெளியிட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என PKR கட்சியின் உதவித் தலைவருமான அவர் சொன்னதாக மலேசியா கினி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!