Latestமலேசியா

2 வயது பிள்ளைக்கு மின் சிகரெட்: தாய் கைது

கோலாலபூர், மே 5-  2  வயது  குழந்தை  வேப் அல்லது  மின் சிகரெட்  புகைக்கும்  காணொளியை  சமூக வலைத்தலத்தில் பதிவேற்றம்  செய்தவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதை  போலீஸ் அறிந்துள்ளதோடு அந்த காணொளியை பதிவேற்றம் செய்த நபரை தேடி வருவதாக  மகளிர் மற்றுர் சிறார் பாலியல்  குற்ற விசாரணைத்துறையின்  துணை உதவி இயக்குனர்  துண கமிஷனர் Siti kamSiah Hassan (சித்தி  கம்சியா ஹசான்} தெரிவித்தார்.

அந்த  காணொளி  பதிவேற்றம் செய்யப்பட்ட  இடத்தை கண்டறிவதற்காக  சமூக நலத்துறையுடன்  நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்.  அந்த குழந்தையை வெப் பழக்கத்திலிருந்து காப்பாற்றுவதற்காக  நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர் கூறினார்.

அந்த குழந்தையின் தாயார் என நம்பப்படும்  பெண் ஒருவர் அக்குழந்தைக்கு  கட்டாயமாக மின் சிகரெட்டை  வாயில் வைத்து புகைக்க வைக்கிறார். அவரது இந்த நடவடிக்கையை நெட்டிசன்களும் கடுமையாக சாடினர்.  12 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியில் விவேக தொலைபேசியில் சிறார்களுக்கான கேலிச்சித்திரத்தை பார்க்கும்  அந்த குழந்தைக்கு இரண்டு முறை மின் சிகரெட் கொடுக்கப்படுகிறது.

அந்த காணொளியைப்  பார்க்கும்போது  அந்த குழந்தை விருப்பமின்றி மின் சிகரெட்டை புகைக்கிறது என தெரியவருகிறது. இதனிடையே  தமது செயலுக்காக அக்குழந்தையின் தாயர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு  அந்த  காணொளியை   பகிர வேண்டாம் என    பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!