Latestமலேசியா

2 வயது பெண் குழந்தை துன்புறுத்தல்; தந்தை கைது

அம்பாங் ஜெயா, மே 2 – அப்பாங் ஜெயா, Jalan Kuariயில் தனது இரண்டு வயது பெண் குழந்தையை துன்புறுத்தி காயம் ஏற்படுத்தியதன் தொடர்பில் அக்குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர். அந்த குழந்தையின் தாத்தா போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து 37 வயதுடைய ஆடவன் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் Mohd Azam தெரிவித்தார்.

அந்த குழந்தையின் தலையில் காயம் இருந்ததோடு அதன் கையிலும் தீக்காயம் காணப்பட்டதால் அதன் 58 வயதுடைய தாத்தா ஏப்ரல் 28 ஆம் தேதி போலீசில் புகார் செய்தார். Jalan Kuariயில் Taman Pinggiran Cherasசிலுள்ள தனது வீட்டில் அந்த குழந்தையை அவரது தந்தை சித்ரவதை செய்துள்ளார் என Mohd Azam கூறினார்.

தற்போது அக்குழந்தை சிகிச்சைக்காக அம்பாங் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் அம்பாங் ஜெயா மாவாட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணைத்துறையைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் Jalan Kuari யில் அந்த சந்தேகப் பேர்வழியை கைது செய்தனர். அந்த நபர் போதைப் பித்தர் என்றும் அவனது சிறுநீர் பரிசோதனை வழி தெரியவந்ததாக Mohd Azam தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த நபர் மே 8 ஆம் தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!