Latestஉலகம்

2 வயது குழந்தை தவறுதலாக சுட்டதால் தந்தை மரணம்

மியாமி, ஜூன் 2 – தோட்டா நிரப்பட்ட துப்பாக்கியை கையில் எடுத்த 2 வயது குழந்தை தவறுதலாக சுட்டதால் அக்குழந்தையின் தந்தை இறந்தார்.

இந்த துயரச் சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் Orlando வுக் அருகே நிகழ்ந்தது. அவசர அழைப்பை பெற்றவுடன் சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு ஒருவர் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் விழுந்து கிடந்ததாக போலீஸ் அதிகாரி John Mina தெரிவித்தார்.

26 வயதுடைய அந்த ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு மரணம் அடைந்தார். தொடக்கத்தில் அந்த ஆடவர் சொந்தமாக சுட்டுக்கொண்டதாக நாங்கள் நினைத்தோம். விசாரணையில் குழந்தையின் கையில் வைத்திருந்த துப்பாக்கியிலிருந்து தோட்டா பாய்ந்ததால் அந்த ஆடவர் இறந்தார் என தெரியவந்ததாக John Mina கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!