
லண்டன், ஜன 5 – 20 கோடிக்கும் அதிகமான டுவிட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் திருடப்பட்டு, இணையத்தில் கசிந்திருப்பதாக, இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு நிறுவனமான Hudson Rock கூறியுள்ளது.
அந்த தனிநபர்களின் தரவுகள் கசிந்திருப்பதின் வாயிலாக, மோசடிகள் அதிகரிக்கலாமென அந்நிறுவனம் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
இவ்வேளையில், அந்த தரவு கசிவு தொடர்பில் இதுவரை டுவிட்டர் எதுவும் கருத்துரைக்காத நிலையில், அதன் தொடர்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் தெரியவரவில்லை.