
கோலாலம்பூர், மார்ச் 10 – 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள டான் ஶ்ரீ முஹிடின் யாசின் , 20 லட்சம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க,கோலாலம்பூர் Sesyen நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும் இரு நபர் உத்தரவாத்தில் விடுவிக்க அனுமதியளித்த நீதிபதி Azura Alwi , வழக்கு முடிவுறும் வரை அந்த முன்னாள் பிரதமர் தமது அனைத்துலக கடப்பிதழை ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டார்.
23 கோடியே 25 லட்சம் ரிங்கிட் தொகையை உட்படுத்திய அதிகார முறைகேடு தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோத நடவடிக்கையின் மூலமாக 1 கோடியே 95 லட்சம் ரிங்கிட் தொகையை பெற்றதாக இரு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியுள்ள முஹிடின் மீதான இந்த வழக்கு விசாரணை மே 26-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.