
கோலாலம்பூர், மார்ச் 3 – கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்டுவந்த மூன்று போதைப் பொருள் விநியோக கும்பலை முறியடித்த போலீசார் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கடந்த திங்கள் முதல் புதன்வரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில் 5 ஆடவர்கள் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதான் வழி அக்கும்பலின் நடவடிக்கை ஒரு முடிவுக்கு வந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Azmi Abu Kassim தெரிவித்தார். இக்கும்பலிடமிருந்து ஒரு Honda Accord கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 16,124 ரிங்கிட்டும் பரிமுதல் செய்யப்பட்டதாக Azmi விவரித்தார்.