Latestமலேசியா

20 லட்சம் வருகையாளர்களை எதிர்பார்க்கும் பத்துமலை முருகன் திருத்தலம்; 7 சாலைகள் மூடல்

கோலாலம்பூர், பிப் 3 – தைப்பூசத்தை முன்னிட்டு , ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்களும், சுற்றுப் பயணிகளும், பத்துமலை திருத்தலத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 6 -ஆம் தேதி வரை பத்துமலை திருத்தலத்தை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்குமென, கோம்பாக் மாவட்ட போலீஸ் உதவி தலைமை ஆணையர் Zainal Mohamed தெரிவித்தார்.

அதையடுத்து, அந்த முருகன் திருத்தலத்தைச் சுற்றியுள்ள 7 சாலைகள் பிப்ரவரி 2 நள்ளிரவு தொடங்கி பிப்ரவரி 8-ஆம் தேதி வரை மூடப்படுமென அவர் கூறினார்.

Kampung Melayu பத்து மலை சாலை சமிக்ஞை சந்திப்பு, பத்து மலை கோயிலை நோக்கி நுழையும் MRR2 சாலை , Jalan Perusahaan சாலை உட்பட மூடப்பட்டிருக்கும் 7 சாலைகளின் விபரங்களும், மாற்று வழி சாலைகள் குறித்த விபரங்களும் கோம்பாக் மாவட்ட போலீஸ் துறையின் அகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!