கூலிம், பிப் 4 – நகைக்கடையில் 20,000 ரிங்கிட் மதிப்புடைய தங்கச் சங்கலியை வாங்கும் வாடிக்கையாளரைப் போல் நடித்து அந்த சங்கலியை எடுத்துக்கொண்டு தப்பியோடிய ஆடவன் கைது செய்யப்பட்டான். அந்த ஆடவன் பினாங்கில், Permatang Pauh விலுள்ள ஒரு உணவகத்திற்கு முன் கைது செய்யப்பபட்டான். லோரி ஓட்டுனரான 44 வயதுடைய அந்த நபர் இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டதை கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Sazalee Adam இதனை உறுதிப்படுத்தினார். அந்த நபர் இதற்கு முன் Padang Serai யிலுள்ள நகைக்கடையிலும் 25,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு காப்புகளை வாங்குவதுபோல நடித்து அதனை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக Sazalee Adam தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்1 hour ago