கோலாலம்பூர், பிப் 3 – கடந்த ஈராண்டுகளில் நாட்டில் 2,000-கும் அதிகமான இந்திய முஸ்லிம் உணவகங்கள் மூடப்பட்டன. கோவிட் தொற்றினால் அந்நிய நாட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதாலும், உள்நாட்டுத் தொழிலாளர்கள் உணவகத் துறையில் வேலை செய்ய முன் வராததாலும் , பலரால் உணவகங்களைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதாக , PRESMA எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவக நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தாய்ப் கான் ( Datuk Jawahar Ali Taib Khan) தெரிவித்தார்.
தற்போது அந்த சங்கத்தில் 10,000 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நாடு முழுவதுமுள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களில் வேலை சேய்ய ஏறக்குறைய 30 ,000 தொழிலாளர்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.