
2020 ஆம் ஆண்டு முதல் 200,000 த்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்திருப்பதாக மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு பிப்ரவரி 28 ஆம் தேதிவரை 209, 903 தொழிலாளர்கள் வேலையிழந்திருப்தை வேலை காப்புறுதி திட்டமான SIP – யின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்களில் 47,168 பேர் தயாரிப்பு தொழில்துறையிலும், சில்லறை மற்றும் வாகன பழுதுபார்க்கும் துறையிலிருந்து 31,434 பேரும் , தங்குமிடம் , கேட்டரிங் துறையில் 20,460 பேரும் வேலை நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர தொழில் நிபுணத்துவம், அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையைச் சேர்ந்த 18,731 பேரும், கட்டுமான தொழில்துறையில் 15,686 பேரும் வேலை இழந்திருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார்.