Latestமலேசியா

RHYTHM அறக்கட்டளையின் மஹாராணி கற்றல் ஆய்வகம் 2.0 அறிமுகம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 – உலகளாவிய விருது பெற்ற philanthropic arm பிரிவு கூட்டு நிறுவனமான QI குழுமத்தின் RHYTHM அறக்கட்டளை, மகாராணி கற்றல் ஆய்வகம் 2.0-ஐ அறிமுகம் செய்துள்ளது.

ஒதுக்கப்பட்ட இளம்பெண்கள் அல்லது விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்கள் பள்ளிக்குப் பிறகு கல்வியை பெறுவதற்கு இந்த மகாராணி கற்றல் ஆய்வகம் 2.0 ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Damansara Damai-இல் உள்ள Zizz-இல் அமைந்துள்ள இந்த 2.0 ஆய்வகத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு SPM தேர்வின் முக்கிய பாடங்களான மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்க பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பயிற்சி, canva, Microsoft office மற்றும் coding போன்றவையும், தனிப்பட்ட வளர்ச்சியின் முன்முயற்சிகள், சுய விழிப்புணர்வு, நம்பிக்கை, தகவல் தொடர்பு திறன் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதையும் இந்த ஆய்வகம் இலக்காக் கொண்டுள்ளது.

RHYTHM அறக்கட்டளையின் தலைவரான Datin Sri Umayal Eswaran தலைமையில் இந்த மகாராணி கற்றல் ஆய்வகம் 2.0-ஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பெண்கள் தங்கள் லட்சியங்களை தொடர ஊக்குவிப்பதும், தலைமைத்துவ திறன்களை வளர்க்கவும் இந்த ஆய்வகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!