
அந்த எண்ணிக்கை, 2021-ஆம் ஆண்டு SPM தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில், 48.74 விழுக்காடு ஆகுமென, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.
அதற்கு முந்தைய 2020-ஆம் ஆண்டு, ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 939 மாணவர்கள் மேற்கல்வியை தொடரவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அதனால், மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கவும், எதிர்கால வாழ்க்கைக்கான திறன்கள் மற்றும் ஆர்வத்தை மேம்படுத்தவும், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தொழில் கல்வித் திட்டங்களை கல்வி அமைச்சு செயல்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் சொன்னார்.
மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதில் வாயிலாக அமைச்சர் அந்த விவரங்களை தெரிவித்தார்.