
புத்ரா ஜெயா, ஜன 21 – 2022 -ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு ஜனவரி 30 – ஆம் தேதி தொடங்கி மார்ச் 15- ஆம் தேதிவரை நடைபெறும். அறிவியல் செயல் முறைக்கான பரிசோதனை, வாய்மொழி மற்றும் எழுத்துப் பூர்வமான தேர்வுகளும் இந்த தேதிகளில் நடைபெறும். பிப்ரவரி 20 – ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 – ஆம் தேதி வரை நடைபெறும் எழுத்துப் பூர்வமான சோதனையை மொத்தம் 403,637 மாணவர்கள் எழுதுவர் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதிலும் 3,355 மையங்களில் எஸ்.பி.எம் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான கால அட்டவணையை தேர்வு வாரியத்தின் அகப்பக்கத்திலிருந்து மாணவர்கள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.