
வாஷிங்டன், ஜன – இவ்வாண்டு, உலகின் மூன்றில் ஒரு பகுதி பொருளாதாரம் மந்த நிலையை எதிர்நோக்குமென IMF உலக நிதியகம் எச்சரித்திருக்கின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் , சீனா முதலிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மெதுவாகியிருக்கும் நிலையில் , கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு உலக நாடுகளுக்கு, சவால் நிறைந்த ஆண்டாகவே அமையுமென IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா ( Kristalina Georgieva ) தெரிவித்தார். தொடரும் யுக்ரேன் போர், அதிகரித்திருக்கும் விலைவாசி, உயர்வான வட்டி விகிதம், சீனாவை மீண்டும் அச்சுறுத்தியிருக்கும் கோவிட் தொற்று ஆகியவை, பொருளாதார மந்த நிலைக்கு காரணங்களாக அமைவதாக அவர் கூறினார். இவ்வேளையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2023 புதிய ஆண்டை தொடங்க சிரமப்படுமென அவர் குறிப்பிட்டார்.