துபாய், பிப் 23 – 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக விமான நிலையங்கள் முழுமையான வளர்ச்சி நிலையை எட்டமுடியாது என உலகின் பரபரப்பான துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் தலைமை செயல் அதிகாரி Paul Griffiths கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 29.1 மில்லியன் பயணிகள் விமானங்களில் பயணம் செய்திருந்தாலும் விமான தொழில்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் கோவிட் தொற்று இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பு இல்லையென அவர் கோடி காட்டினார்.
கோவிட் தொற்று பரவுவதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் 86 மில்லியன் பயணிகள் துபாய் விமான நிலையத்தின் மூலமாக பயணம் செய்தனர்.
ஆனால் கோவிட் தொற்றினால் கடந்த சில ஆண்டு காலமாக விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதை Paul Griffiths சுட்டிக்காட்டினார். எப்படியிருந்தபோதிலும் தொடர்ந்து 8 ஆவது ஆண்டாக உலகில் அதிக அளவில் விமான பயணிகள் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.
முழுமையான வளர்ச்சி 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகே பார்க்க முடியும் என அவர் தெரிவித்தார்.