புத்ராஜெயா, ஆகஸ்ட் 21 – புத்ராஜெயா டத்தாரானில் நடைபெறவுள்ள நாட்டின் 67ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு திரண்டு வரவிருக்கின்ற மக்களுக்குப் பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு நடைப்பெறவுள்ள தேசிய கொண்டாட்டத்தில் திரளாக மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக, இவ்வாண்டு பார்வையாளர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில் அமரும் இருக்கைகளின் எண்ணிக்கையை இரு மடங்குச் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சுதந்திர தினக் கொண்டாட்டத்தைப் பார்க்க வேண்டும் எனப் பலர் ஒரு நாளுக்கு முன்பே அங்கு வந்து முகாம்கள் அமைப்பார்கள்.
இவ்வாண்டும் அமைச்சு, தற்காலிக முகாம்கள் அமைத்துத் தக்க வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.
கொண்டாட்டத்தை முன்னிட்டு புத்ராஜெயாவில் சில பாதைகள் மூடப்படவுள்ளன.
வாகனம் நிறுத்துமிடங்களிலிருந்து புத்ராஜெயா டத்தாரனுக்குப் பார்வையாளர்களை வசதியாகச் செல்வதற்கு, நீர் டாக்சி சேவையையும் வழங்கப்படவுள்ளது எனத் தேசிய தினக் கொண்டாட்டங்களின் குழு தலைவருமான ஃபஹ்மி விவரித்தார்.
Interview
Merdeka 360 என்ற அகப்பக்கம் வாயிலாக பொதுமக்கள் இது பற்றிய விவரங்களைப் பெறலாம் என முன்தினம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அவர், இவ்விரங்களை தெரிவித்தார்.