கோலாலம்பூர், ஆக 15 – 2024 தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி , மோனோரயில் மற்றும் BRT சன்வே வழித்தடம் மற்றும் ரெப்பிட் கே.எல் பஸ் வழித்தட சேவை ஆகஸ்டு 30 ஆம் தேதி இரவில் 24 மணி நேர சேவையை நடத்தவிருக்கிறது. ஆகஸ்டு 30 ஆம் தேதி காலை 6 மணி தொடங்கும் அனைத்து ரயில் சேவைகளும் மறுநாள் ஆகஸ்டு 31ஆம் தேதி இரவு மணி 11.30 வரை நீட்டிக்கப்படும் என Prasarana குழுமத்தின் தலைவரும் நிர்வாக செயல் அதிகாரியுமான முகமட் அஸாருடின் மாட் சான்
( Mohd Azharuddin Mat San ) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,
Rapid KL Stesen MRT putra jaya Sentral முதல் Dataran Putra Jaya வரை ஆகஸ்டு 30 ஆம்தேதி காலை 6 மணிமுதல் மறுநாள் ஆகஸ்டு 31 ஆம் தேதி மாலை 3 மணிவரை 60 இலவச பஸ் பயணங்களை ரெப்பிட் கே.எல் ஏற்பாடு செய்துள்ளது. கோலாலம்பூர் மக்கள் புத்ரா ஜெயாவில் நடைபெறும் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செய்யும் வகையில் இந்த ஏற்பாடு அமைகிறது. மேலும் MRT Putra Jaya Sentral லிருந்து புத்ரா ஜெயாவிலுள்ள கண்கவர் இடங்களான தாவர பூங்கா, Marina PutraJaya, Alamanda மற்றும் Putrajaya அனைத்துலக மாநாட்டு மண்டபம் போன்றவற்றை பார்வையிடுவதற்கு 9 பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டத்தின் மகிழ்சியை இரட்டிப்பாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கான தனது ஆதரவாக , முதல் முறையாக இந்த சேவை மேற்கொள்ளப்படுவதாக முகமட் அஸாருடின் தெரிவித்தார்.