Latestமலேசியா

2024 பட்ஜெட் குறித்து DAP அமைச்சர்கள்- எம்.பி.க்கள் கலந்துரையாடல் நடத்தினர்

கோலாலம்பூர் செப் 20- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 2024 பட்ஜெட் குறித்து DAP அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் இடையே நேற்றிரவு கருத்து பரிமாற்றம் மற்றும் கலந்துரையாடல் நடத்தினர். அந்த கலந்துரையாடலில் DAP யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கலந்து கொண்டார்.

வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், மனிதவள துறை அமைச்சர் வி. சிவகுமார் மற்றும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ ஆகியோருடன் DAP எம்.பி.க்களும் இதில் கலந்து கொண்டனர். நடப்பு அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!