Latestமலேசியா

2024, மார்ச் மாதத்திற்கான கூடுதல் வாக்காளர் பட்டியல் வெளியீடு; சரிபார்க்க 1 மாத கால அவகாசம்

புத்ராஜெயா, ஏப்ரல்-30 – 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான கூடுதல் வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டு இன்று அரசிதழில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து மே 29-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் SPR கூறியது.

இந்த கூடுதல் வாக்காளர் பட்டியல், மார்ச் முதல் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை தானியங்கி முறையில் பதிவுச் செய்யப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட 38,729 புதிய வாக்காளர்கள், தொகுதி மாறிய 6,282 வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பிரிவு மாறிய 1,737 வாக்காளர்களின் விவரங்களை உள்ளடக்கியிருக்கிறது.

எனவே மேற்கண்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள் இந்த 1 மாதக் காலக்கட்டத்தில் இந்த கூடுதல் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களையும் விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ளுமாறு SPR கேட்டுக் கொண்டுள்ளது.

MySPR Semak செயலி, Hotline தொலைப்பேசி அழைப்புச் சேவை உள்ளிட்ட 5 வழிகளில் பொது மக்கள் அவ்வாறு சரிபார்க்கலாம்.

ஒருவேளை பெயர்கள் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் SPR இணைய அகப்பக்கத்திற்குச் சென்று C படிவத்தைப் பூர்த்திச் செய்யலாம்.

அல்லது மாநில SPR அலுவலகங்களை நாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!