Latestமலேசியா

2025 ஜனவரி முதல் புதிய 150cc மோட்டார் சைக்கிள்களில் ABS பாதுகாப்பு அம்சம் இருப்பது கட்டாயம்

புத்ராஜெயா, செப்டம்பர்-3, 150cc மற்றும் அதற்கும் மேற்பட்ட இயந்திர ஆற்றலைக் கொண்ட அனைத்துப் புதிய மோட்டார் சைக்கிள்களும், அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி ABS எனப்படும் பூட்டுதலில்லா பிரேக் அமைப்பு முறையை (Anti-lock Braking System) கொண்டிருத்தல் கட்டாயமாகும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி (Datuk Seri Ahmad Zahid Hamidi) அதனைத் தெரிவித்தார்.

சாலை விபத்துகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகளையும் பின்னால் அமர்ந்து செல்பவர்களையும் உட்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளில் அதுவும் ஒன்றாகும்.

கடந்தாண்டு சாலை விபத்துகளில் பதிவான உயிரிழப்புகளில் 65% மோட்டார் சைக்கிளோட்டிகளை உட்படுத்தியது என்றார் அவர்.

முக்கியமான பாதுகாப்பு அம்சமான இந்த ABS முறை, மரண விபத்துகளை 31% விழுக்காடுக் குறைக்கவல்லது என உலக சுகாதார நிறுவனவே (WHO) கூறியிருக்கிறது.

எனவே தான் அதனைக் கட்டாயமாக்க அரசாங்கம் முடிவெடுத்ததாக துணைப்பிரதமர் சொன்னார்.

ABS என்பது மோட்டார் வாகனத்தின் பிரேக்கை பயன்படுத்தும்போது, அதன் சக்கரங்கள் பூட்டிக் கொள்ளாமல் (அல்லது சுழலுதல் நிறுத்தப்படாமல்) தடுக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும்.

இது வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், நிறுத்தும் தூரத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!