Latestமலேசியா

2026 பிப்ரவரி வரை Influenza காய்ச்சல் தடுப்பூசி கையிருப்பு போதுமானது

கோலாலம்பூர், டிசம்பர்-2 – நாட்டில் Influenza காய்ச்சல் தடுப்பூசிகளின் கையிருப்பு வரும் பிப்ரவரி வரை போதுமானதாக இருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை எந்த விநியோக தடங்கல் புகாரும் வரவில்லை என, துணையமைச்சர் டத்தோ Lukanisman Awang Sauni, மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாசலத்தின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறினார்.

பல மாநிலங்களில் கையிருப்புத் தீர்ந்துபோகும் அளவுக்கு தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரிப்பதால், Influenza தடுப்பூசிகளின் இருப்பு எவ்வளவு என்பதை லிங்கேஷ் அறிய விரும்பினார்.

அதற்கு பதிலளித்த துணையமைச்சர், கடந்த நவம்பர் 10 வரையிலான நிலவரப்படி, அரசாங்க மருத்துவனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மருத்துவ பணியாளர்களுக்காக 4,044 டோஸ்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக 2,881 டோஸ்கள் இருந்தன என்றார்.

இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் மலேசியா 26 மில்லியனுக்கும் மேற்பட்ட டோஸ்களை இறக்குமதி செய்துள்ளது.

அவற்றில் 429,130 டோஸ்கள் நவம்பர் 25, 30 மற்றும் டிசம்பர் 9 அன்று வந்தடைய வேண்டுமென்றார் அவர்.

இவ்வேளையில், தனியார் சந்தையில் Influenza தடுப்பூசிகளின் விலைக் கட்டுப்பாடு குறித்து லிங்கேஷ்வரன் கேட்டதற்கு, எல்லை மீறிய விலை உயர்வைத் தடுக்க KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்போடு அணுக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக Lukanisman கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!