வாஷிங்டன், பிப் 4 – ISS அனைத்துலக விண்வெளி நிலையம் 2030 -ஆம் ஆண்டு வரை செயல்படும் எனவும், அதன் பின்னர் அந்த ஆராய்ச்சி நிலையம், அதன் கடைசி உறைவிடமான பசிபிக் கடலில் விழுந்து நொறுங்குமென, NASA அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
பூமியின் நிலப் பகுதியிலிருந்து வெகு தூரம் தள்ளியிருக்கும் பசிபிக் கடல் பகுதியான Point Nemo பகுதியில் அந்த விண்வெளி நிலையம் விழுந்து நொறுங்கும். விண்கலங்களின் மயானப் பகுதியாகவும் கருதப்படும் Point Nemo -வில் ஏற்கனவே பல பழைய துணைக்கோளங்களும், இதர விண்வெளி ஆராய்ச்சி பாகங்களும் விழுந்து நொறுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இனி எதிர்காலத்தில், பூமிக்கு நெருங்கிய விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளை வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ளுமென NASA கூறியுள்ளது.