Latestஉலகம்விளையாட்டு
2032 ஆம் ஆண்டு EURO காற்பந்து போட்டியை நடத்த இத்தாலி ஆர்வம்
மில்லன், பிப் 8 – 2032 ஆம் ஆண்டுக்கான EURO காற்பந்து போட்டியை ஏற்று நடத்துதற்கு இத்தாலி காற்பந்து சங்கம் ஆர்வம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக EURO காற்பந்து போட்டியை நடத்தும் திட்டம் குறித்து இத்தாலி காற்பந்து சம்மேளனம் ஐரோப்பிய காற்பந்து சங்கத்திடம் தெரிவித்துள்ளது. அந்த போட்டிக்காக நாட்டிலுள்ள காற்பந்து விளையாட்டரங்குகள் நவீனமயப்படுத்தப்படும் என்பதோடு புதிய விளையாட்டரங்குகளும் நிர்மாணிக்கப்படும் என இத்தாலிய காற்பந்து சம்மேளனம் கூறியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற EURO காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் இத்தாலி பெனால்டியின் மூலம் 3 -2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து குழுவை வீழ்த்தியது,