Latestமலேசியா

21 நீதிபதிகளுக்கு பேரரசர் நியமனக் கடிதங்களை வழங்கினார்

புத்ரா ஜெயா, ஜன 17 – இன்று இஸ்தான நெகாராவில் நடைபெற்ற சடங்கில் 21 நீதிபதிகளுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா நியமனக் கடிதங்களை வழங்கினார். மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி Abang Iskandar Abang Hashim இந்த பட்டியலில் தலைமையேற்றார். மேலும் மலாயா தலைமை நீதியாக நியமிக்கப்பட்டுள்ள Zabidin Diah மலாயா, சபா மற்றும் சரவா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள Abdul Rahman Sebli மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Nordin Hasan ஆகியோரும் பேரரசரிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள Azman Abdullah, Azimah Omar, Collin Lawrence Sequerah, Zaini Mazlan, Wong Kian Keong மற்றும் Lim Chong Fong ஆகியோரும் பேரரசரிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
இதுதவிர 11 நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Norsharidah Awang, Tee Geok Hock, Zaleha Rose Pandin, Alice Loke, Azhar Abdul Hamid, Arik Sanusi Yeop Johari, G Bhupindar Singh, Mahazan Mat Taib, Ahmad Murad Abdul Aziz, Liza Chan and Wan Amin Wan Yahya ஆகியோரே இந்த நீதிபதிகளாவர். இந்த நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசியார் Tunku Azizah Aminah ,சட்ட மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சர் Azalina Othman Said and தலைமை நீதிபதி Tengku Maimun Tuan Mat ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!