Latestஉலகம்

சட்டவிரோத திருமணம் செய்ததற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 7 வருட சிறைத்தண்டனை

பாகிஸ்தான், பிப் 4 – தொடர்ச்சியாக பல வழக்குகள் மூலம் சிறைத்தணடனை விதிக்கப்பட்டு வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சட்டவிரோதமாக திருமணம் செய்ததற்காக 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

71 வயது இம்ரான் கானுக்கு ஏற்கனவே அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதற்காக 10 ஆண்டுகள் சிறையும் அரசாங்க அன்பளிப்புகளை சட்டவிரோதமாக விற்றதற்காக அவரது மனைவியோடு சேர்த்து 14 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்படிருந்தார்.

இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்திருந்த இம்ரான் கான் கடந்த 2018-ல் மூன்றாவது மனைவி Bushra Khan-னை திருமணம் செய்தார். Bushra தனது 30 வருட முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற பிறகு இஸ்லாத்தில் “Iddat” எனப்படும் குறிப்பிட்ட கால கட்டம் வரை காத்திராமல் திருமணம் செய்தது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முன்னாள் கணவரே அவருக்கு எதிராக புகார் செய்திருந்தார்.

வருகின்ற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடாமல் செய்வதற்காகவும் ஏமாற்று வேலைகளால் வெற்றி பெறவும் அரசாங்கம் வேண்டுமென்றே அவர் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்திருப்பதாக அவரின் PTI கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!