Latestமலேசியாவிளையாட்டு

21 மாதங்கள் தோல்வி அடையாத தனது சாதனையை JDT பறிகொடுத்தது

ஜோகூர் பாரு,ஏப்ரல் 25 – நேற்று,இஸ்கண்டார் புத்ரியிலுள்ள சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில்,ஏழு முறை சூப்பர் லீக் வெற்றியாளரான JDT அணி, திரெங்கானு FC அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

திரெங்கானு FC அணியின் ஒரே வெற்றி கோலை, அவ்வணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் மொஹமட் ஹகிமி அப்துல்லா அடித்தார்.

திரெங்கானு FC-அணியின் அந்த வெற்றி கோல், 21 மாதங்களாக எந்தவோர் ஆட்டத்திலும் தோல்வியடையாமல் இருந்த JDT அணியின் சாதனையையும் முடிவுக்கு கொண்டு வந்தது.

அந்த ஆட்டத்தில் JDT அணி தோல்வி கண்டாலும், சூப்பர் லீக்கில் மொத்தம் 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!