
வாஷிங்டன், செப்டம்பர் 19 – 22 அணுகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு சமமான சக்தியைக் கொண்ட சிறுகோள் ஒன்று, பூமியில் விழும் என இதற்கு முன் கூறப்பட்ட வேளை ; அது பூமியில் எப்பொழுது விழுமெனும் சரியான தேதியை விஞ்ஞானிகள் இப்பொழுது வெளியிட்டுள்ளனர்.
பென்னு என அழைக்கப்படும் அந்த விண்வெளி பாறை ஆறாண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடந்து செல்வது வழக்கமாகும்.
எனினும், 2184-ஆம் ஆண்டு, செப்டம்பர் 24-ஆம் தேதி, ஒரே கோட்டில் பயணிக்கும் என்பதால், பூமியும் அந்த சிறுகோளும் மோதிக் கொள்ளுமென கணிக்கப்பட்டுள்ளது.
அந்த தேதி இன்னும் வெகு தொலைவில் இருந்தாலும், பென்னுவை அந்த நேர் பாதையிலிருந்து திசை திருப்ப, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடுமையாக உழைத்து வரும் வேளை ; அது தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பென்னுவிலிருந்து நாசா பூமிக்கு கொண்டு வரும் மாதிரி, இம்மாதம் 24-ஆம் தேதி, உட்டாவிலுள்ள பாலைவனப்பகுதியில் தரையிறங்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு பென்னுவின் மேற்பரப்பிலிருந்து நாசா அந்த 250 கிராம் மாதிரியை சேகரித்ததாக கூறப்படுகிறது.
பென்னு பூமியில் விழுந்தால், அது சுமார் 9.6 கிலோமீட்டர் ஆழமுள்ள பள்ளத்தை உருவாக்கும் என்பதோடு, எல்லா திசைகளிலும் சுமார் 965 கிலோமீட்டர் தூரம் வரை அழிவை ஏற்படுத்துமென நாசா கணித்துள்ளது.