கோலாலம்பூர், பிப் 15 – செராஸ் வட்டாரத்தில் 22 சூதாட்ட விடுதிகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி திங்கிட்கிழமைவைரை மேற்கொள்ளப்பட் அந்த நடடிவகையின்போது 25 பேர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Muhamad Idzam கூறினார்.
21 சூதாட்ட மையங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதால் அவற்றுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அந்த சூதாட்ட மையங்களிலிருந்து நான்கு கையடக்க கணினிகள், 12 கை தொலைபேசிகள், 100 கணினிகள், 1,626 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக Muhamad Idzam விவரித்தார்.