Latestமலேசியா

23 மீட்டர் நீளத்திற்கு தேசிய கொடி மேகா ஜீனியர்ஸ் பாலர் பள்ளி மாணவர்கள் சாதனை

இஸ்கந்தர் புத்ரி, ஆக 28 – ஜொகூர் பாரு Taman Mega Genius பாலர் பள்ளி மாணவர்கள் தேசிய தினத்தை முன்னிட்டு 23 மீட்டர் நீளம் மற்றும் 8.5 மீட்டர் அகலத்திற்கு ஜாலோர் கெமிலாங் தேசிய கொடியை தயாரித்துள்ளனர். 66ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அந்த மாணவர்கள் வடிவமைத்த அந்த தேசிய கொடி மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளதாக அந்த பாலர் பள்ளியின் தலைமையாசிரியை R. Mohanambal தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வார காலமாக முட்டைகளை வைப்பதற்கு பயன்படுத்தப்படும் மொத்தம் 2,128 அட்டைகளை பயன்படுத்தி இந்த தேசிய கொடியை மாணவர்கள் உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.

மொத்தம் 86 மாணவர்களுடன் பாலர் பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களும் தேசிய கொடியை சித்தரிக்கும் கொடிக்கான வர்ணங்களை அடித்தாகவும் அவர் கூறினார்.

தேசிய தினத்திற்கான கொடியை உருவாக்கும் நிகழ்வில் தனக்கு கிடைத்த அனுபவத்தை ஆறு வயது மாணவர் Shasvinth இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

இந்த திட்டத்திற்கான அட்டை பெட்டிகளை பெற்றோர்கள் கொடுத்து உதவியுள்ளனர். தேசிய கொடி தயாரிக்கும் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து பாலர் பள்ளி மாணவர்களுக்கும் மலேசிய சாதனை புத்தக அலுவலகத்தின் நிர்வாகி Lee Pooi Leng சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஜோகூரின் Kemelah சட்டமன்ற உறுப்பினர் Saraswathi யும் கலந்துகொண்டார். மூன்று முதல் ஆறு வயதுடைய பாலர் பள்ளி மாணவர்கள் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் சிறுவர்களிடையே படைப்பாற்றலை உருவாக்கும் இது போன்ற நிகழ்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டு என அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!